`கலகம் பண்ண அனுமதிக்க மாட்டேன்'- சட்டப்பேரவையில் ஈபிஎஸ், அதிமுக எம்எல்ஏக்களை எச்சரித்த சபாநாயகர்!

`கலகம் பண்ண அனுமதிக்க மாட்டேன்'- சட்டப்பேரவையில் ஈபிஎஸ், அதிமுக எம்எல்ஏக்களை எச்சரித்த சபாநாயகர்!

`ஒரு குறிக்கோளுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். கலகம் பண்ண அனுமதிக்க மாட்டேன்' என்று ஈபிஎஸ், அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப் பேரவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் குறித்த பிரச்சினையை எழுப்பினார். அப்போது பேசிய சபாநாயகர்,“எந்த பிரச்சினை எழுப்புவதாக இருந்தாலும், அதற்காக நேரம் கொடுக்கும் போது உங்களுடைய உரிமையைப் பேச அனுமதிக்கிறேன். கேள்வி நேரத்தில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இதுபோல் எப்போதும் நடைபெற்றது இல்லை. இப்போதும் நடைபெறாது. கேள்வி நேரம் முடியட்டும். அலுவல் நேரத்தில் உங்களுக்கு நேரம் ஒதுக்குகிறேன்” என்றார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ”நீங்கள் முதல்வராக இருந்தவர்கள். உங்களுக்குச் சட்டமன்ற நிகழ்வுகளில் எதை எப்போது பேச வேண்டும் என்பது தெரியும்.  நீங்கள் பேசுவது எதுவும் சபைக்குறிப்பில் இடம் பெறாது. அதனால் அமைதியாக உட்காருங்கள்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “எதிர்க்கட்சி தலைவர் பேச்சை நான் குறுக்கிட விரும்பவில்லை. பேரவைத் தலைவரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு நீங்கள் நேரம் ஒதுக்கி இருக்கிறீர்கள். கேள்வி நேரம் முடிந்த பிறகு அவர்கள் சபாநாயகர் அறிவிப்பு என்னவென்பதை கேட்டுவிட்டுப் போகலாம்” என கிண்டலாக சொல்லிச் சிரித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in