காங்கிரஸில் இணைகிறார்... ஆந்திர முதல்வரின் சகோதரி அதிரடி முடிவு!

ஜெகன் மோகன் ரெட்டி ஷர்மிளா
ஜெகன் மோகன் ரெட்டி ஷர்மிளா

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தெலங்கானா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒய் எஸ் ஷர்மிளா
ஒய் எஸ் ஷர்மிளா

இது தொடர்பாக ஷர்மிளா தனது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க ஷர்மிளா டெல்லி சென்றார். அங்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை அவர் சந்தித்து பேசினார்.

மேலும் அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார். எந்தவித நிபந்தனையும் இன்றி ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை காங்கிரசுடன் இணைக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் பாலேரு தொகுதியில் ஷர்மிளா போட்டியிடுவார் எனவும், காங்கிரஸ் கட்சிக்காக தெலங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் தெரிகிறது. இந்த வாரம் சோனியா காந்தி முன்னிலையில் ஷர்மிளா காங்கிரசில் கட்சியை இணைக்க உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in