`இந்த 3 பேரைத் தவிர அதிமுகவில் யார் வேண்டுமானாலும் இணையலாம்'- சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்`இந்த 3 பேரைத் தவிர அதிமுகவில் யார் வேண்டுமானாலும் இணையலாம்'- சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

’’அதிமுகவில் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா இவர்களைத்தவிர யார் வேண்டுமானாலும் வந்து இணையலாம். அவர்களை வரவேற்க தயாராக உள்ளோம்’’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’ஒன்றரைக் கோடித் தொண்டர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாண்டவர்களுக்கு வெற்றிக் கிடைத்துள்ளது. கவுரவர்கள் வெற்றிப் பெற்றதாக சரித்திரம் இல்லை.

அரசியலில் ஓ.பி.எஸ்ஸின் எதிர்காலம் ஜீரோதான்; ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை; அவர்கள் தவிர மற்றவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in