ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்?- ஜி.கே.வாசன் சொல்லும் காரணம் இதுதான்!

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன் திமுகவுக்கு எதிர்ப்பு ஓட்டுக்கள் அதிகரித்துள்ளது: ஜி.கே.வாசன் கணிப்பு

``திமுக ஆட்சிக்கு வந்து 19 மாதங்களில் பல கடமைகளில் இருந்து தவறியுள்ளது. இதனால் திமுகவுக்கு எதிர்ப்பு ஓட்டுக்கள் அதிகரித்துள்ளது'' என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டிக் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுக்காக தீவிரமாக வேலைசெய்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் சீர்காழி பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு நேரடியாகப் போய் ஆய்வு செய்தேன். அப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அரசு உரிய நிதியை செய்யவில்லை.

இப்போது டெல்டாவிலும் மழையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு கைகொடுக்க வேண்டும். அப்படி கைகொடுக்கும் பணியில் இருந்து திமுக அரசு தவறிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்பி உரிய கள ஆய்வு செய்யவும் அரசு தாமதிக்கிறது. அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதை கூட்டணியில் கலந்துபேசி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவை நிற்க சம்மதித்தோம். வெற்றிவாய்ப்பு அதிமுகவுக்கு இருப்பதுதான் உண்மை. திமுக ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் ஆகிறது. அவர்களின் குறைகளாக பெரிய பட்டியலே போடலாம். திமுகவுக்கு எதிர்ப்பு ஓட்டுகள் அதிகரித்து வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அதுவே அடித்தளம் இட்டுவருகிறது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in