இன்னொரு கட்சியும் குட்பை... இருப்பைத் தொலைக்கும் இந்தியா கூட்டணி!

ஜெயந்த் சவுத்ரி
ஜெயந்த் சவுத்ரி

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சியும் கூட்டணியிலிருந்து விலகி பாஜக பக்கம் சாய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருப்பதால் இந்தியா கூட்டணிக் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அகிலேஷ் யாதவுடன்  ஜெயந்த் சவுத்ரி
அகிலேஷ் யாதவுடன் ஜெயந்த் சவுத்ரி

மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. மொத்தம் 28 கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்தன. இந்த நிலையில் இந்த கூட்டணியை உடைக்கும் வேலைகளை பாஜக திட்டமிட்டு செய்து வருகிறது. இந்தியா கூட்டணியை உடைப்பதற்காகவே அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை அங்கிருந்து வெளியேற்றி தங்கள் கூட்டணிக்கு கொண்டு வந்து இணைத்துள்ளது பாஜக. இது இந்தியா கூட்டணிக் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில்,  தற்போது அங்கிருந்து மேலும் ஒரு கட்சியை தங்கள் கூட்டணிக்குள் இழுத்துள்ளது பாஜக. 

பாஜக தலைவர் நட்டா
பாஜக தலைவர் நட்டா

முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங்கின் மகனுமான ஜெயந்த் சவுத்ரி, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியின் தலைவராக உள்ளார். இக்கட்சி, இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது. உத்தரப் பிரதேசத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் களமிறங்க திட்டமிட்டிருந்த ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிக்கு, ஏழு தொகுதிகள் ஒதுக்குவதாக சமீபத்தில் சமாஜ்வாதி அறிவித்தது.

இந்நிலையில் ஜெயந்த் சவுத்ரி நேற்று பாஜக தலைவர் நட்டாவை ரகசிய இடத்தில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தியா கூட்டணிக்கு குட்பை சொல்லவும் பாஜக கூட்டணியில் இணையவும் சவுத்ரி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in