திமுகவில் இருந்து அடுத்தடுத்து களையெடுக்கப்படும் நிர்வாகிகள்!

 திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி மேலும் 19 பேர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகிறார். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளுக்கு வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 107 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

இந்நிலையில், திமுகவில் இருந்து இன்று மேலும் 19 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் என்ற அடிப்படையில் 19 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in