குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடருமா?

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடருமா?

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி இத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 5-ம் தேதி தொடங்குகிறது, ஜூலை 19-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூலை 20-ல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும், ஜூலை 22 -ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கையும் அன்றே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு களமிறங்கியுள்ளார். காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, ஆர்எல்டி, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக பொது வேட்பாளரை தேர்ந்தெடுத்ததைப் போல, துணைத் தலைவர் தேர்தலுக்கும் இந்த கூட்டணி ஒற்றுமையுடன் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in