முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

ஸ்டாலினுக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து
ஸ்டாலினுக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்துமுதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், திரையுல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், " தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொதுவாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் " என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in