இன்று அண்ணாமலை டெல்லி பயணம்; உன்னிப்பாக கவனிக்கும் அதிமுக!

இன்று அண்ணாமலை  டெல்லி பயணம்; உன்னிப்பாக கவனிக்கும் அதிமுக!

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார். அங்கு அவர் முக்கிய தலைவர்களை சந்தித்து அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி

பாஜகவின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றியும், யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என்பது பற்றியும் அண்ணாமலை இன்றைய தினம் டெல்லியில் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார். அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோரின் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப சென்னையில் 3ஆம் தேதி நடைபெறும் பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசுவார் எனத் தெரிகிறது.

அண்ணாமலையின் இன்றைய டெல்லி பயணம் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் டெல்லியில் எடுக்கப்படும் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிய தமிழக பாஜக நிர்வாகிகள் இப்போதே ஆர்வமாக உள்ளனர். டெல்லி பயணத்தின் போது தனது என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சி குறித்தும் அதற்கு கிடைத்துள்ள வரவேற்பு பற்றியும் பாஜக மேலிடத் தலைவர்களிடம் அண்ணாமலை எடுத்துக் கூறுவார் எனத் தெரிகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலையுடன் தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலரும் டெல்லி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக, பாமக, உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைப்பது பற்றியும் இன்று டெல்லியில் ஆலோசனைகள் நடைபெறலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றன. பாஜக பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்னவெல்லாம் பேசினார்கள், எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்பது பற்றியும் மேலிடத் தலைவர்களிடம் அண்ணாமலை முறையிடுவார் எனத் தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in