அண்ணாமலை தமிழகத்தை சேர்ந்தவரே அல்ல- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

``வந்தாரை வாழவைக்கும் தமிழகம் புண்ணிய பூமி தான்; தமிழகம் வளர்ச்சி பாதை அடைய முக்கிய காரணம் திராவிடம் தான். எதற்கெடுத்தாலும் குறைக் கூறும் அண்ணாமலை தமிழகத்தை சேர்ந்தவரே இல்லை'' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பணி நியமன ஆணை
பணி நியமன ஆணை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்துசமய அற நிலையத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 31 சுருக்கெழுத்துத் தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’இந்த 2 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் இந்து அறநிலையத்துறையில் காலியாக இருந்த 240 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 539 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பழநி மற்றும் பூம்புகார் இந்து அறநிலையத்துறை சார்ந்த கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில் 300 கோடி ரூபாய்க்கான திருப்பணிகள் 40% மேற்கொள்ளப்பட்டுள்ளது‌. 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமயபுரம் மாரியம்மன் கோயில் திருப்பணிகளும், 90 கோடி ரூபாய் அளவில் திருத்தணி கோயில்களுக்கு மாற்றுபாதை பணிகளும், 149 கோடி ரூபாய் அளவில் பெரியபாளையம் கோயிலுக்குச் திருப்பணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

தொடர்ந்து பேசிய அவர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தவறு நடைப்பெறாமல் தடுக்கும் அரசு திமுக அரசு; சட்டத்தின் படி அரசு செயல்படும். நீதிமன்ற படிக்கெட்டுகளை தீட்சிதர்கள் ஏறிக் கொண்டு இருக்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தவறுகள் நடைபெற இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் புண்ணிய பூமி என்பதில் மாற்று கருத்து இல்லை. திராவிடத்தால் தான் தமிழகம் வளர்ச்சியுற்றது. ஆகவே இது திராவிட பூமி என்பதே பொருத்தமாக இருக்கும். திராவிடத்தால் தமிழகம் வளர்ச்சி அடைந்தது. தமிழகத்தை திராவிட பூமி என்று அழைப்பதில் தவறு இல்லை.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கலாச்சாரம் மையம் திட்டமிட்டபடி அமைக்கப்படும். எதற்கு எடுத்தாலும் அரசைக் குறை கூறும் பாஜக, அண்ணாமலை தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட உள்ள கலாச்சார மையத்தில் ஆன்மிக பயிற்சி நூலகங்கள் அமைக்கப்படும். அறங்காவலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படி கலாச்சாரம் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கலாச்சார மையத்தில் ஆன்மிக பயிற்சி, நூலகம் அமைக்கப்படும். இதில் எந்தவிதமான சட்டவிதிமீறல் எதுவும் இல்லை’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in