அண்ணாமலை அரவக்குறிச்சி தேர்தலில் ஆயிரம் ரூபாய் கொடுத்தும் மக்களால் புறக்கணிக்கப்பட்டார்: செந்தில்பாலாஜி பாய்ச்சல்

செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜிஅண்ணாமலை அரவக்குறிச்சி தேர்தலில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தும் மக்களால் புறக்கணிக்கப்பட்டார்: செந்தில்பாலாஜி பாய்ச்சல்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரவக்குறிச்சி தேர்தலில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். அவர் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தும் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் என்று தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை சித்ரா அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது.., "முதல்வரின் 70 வது பிறந்த நாளை கோவை மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகள், ரத்ததான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் ஐந்தாம் தேதி கோவை கொடிசியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி் ஸ்டாலின் பங்கேற்று 70 ஜோடிகளுக்கு இலவச திருமணங்களை செய்து வைக்க உள்ளார். அதனைத்தொடர்ந்து கொடிசியா சாலையில் மாட்டு வண்டி பந்தயத்தை துவக்கி வைத்து பரிசுகளை வழங்க உள்ளார். பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை பொறுத்திருந்து பாருங்கள்.

தமிழ்நாட்டில் பாஜகவின் உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?. வாட்ச்க்கான பில்களை கேட்டேன் இதுவரை தரவில்லை. அண்ணாமலை பரிசுப் பொருட்கள் தருவதாக கூறினார், நான் பலமுறை கூறியிருக்கிறேன். அண்ணாமலை அரவக்குறிச்சி தேர்தலில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தும் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். பொது வழியில் கருத்துக்களை சொல்கின்ற போது நாம் எப்படி இருக்கிறோம், நாம் எப்படி செயல்படுகிறோம்?. நாம் எந்த கட்சியை சார்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அண்ணாமலை குற்றச்சாட்டுகளை கூறுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளார்.

கோடைகாலத்தில் எவ்வளவு கூடுதல் மின்சாரம் தேவை என்பது கணக்கிடப்பட்டிருக்கிறது. அதற்கான டெண்டர் கோரப்பட்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு மட்டும் எவ்வளவு தேவை என்பதனை கணக்கிட்டு டெண்டர் போடும் பணிகள் நிறைவடையக்கூடிய நிலையில் இருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டி அடுத்த ஆண்டு முதல் கோவையில் நடைபெறும். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பல்வேறு முறை நாடாளுமன்றத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் மத்திய அரசு அதற்கான நிதிகளை ஒதுக்கவில்லை, அதற்கு செவி சாய்க்கவும் இல்லை" என்றார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in