முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்கு அண்ணாமலை திடீர் விசிட்

ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் கூறும் அண்ணாமலை
ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் கூறும் அண்ணாமலைமுன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்கு அண்ணாமலை திடீர் விசிட்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெரியகுளத்தில் இன்று சந்தித்துப் பேசினார். அத்துடன் மறைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

ஓபிஎஸ் தாயார் படத்திற்கு அண்ணாமலை அஞ்சவி.
ஓபிஎஸ் தாயார் படத்திற்கு அண்ணாமலை அஞ்சவி.முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்கு அண்ணாமலை திடீர் விசிட்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(95), உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24-ம் தேதி பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். அவரது மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவிற்கு துக்கம் விசாரிப்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு இன்று சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அத்துடன் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை," தமிழக முன்னாள் முதல்வர், ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்குச் சென்று, அவரது தாயார் பழனியம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையை ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற இறைவனை வேண்டுகிறேன். தாயாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in