ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: தமிழக உளவுத்துறை அதிகாரி மீது பரபரப்பு புகார்

ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: தமிழக உளவுத்துறை அதிகாரி மீது பரபரப்பு புகார்

போலி பாஸ்போர்ட் சம்பந்தமாக தமிழக உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் என்.ரவியை இன்று சந்தித்தார். அப்போது போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தமிழக உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஆளுநரிடம் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மதுரை காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்த போது 200-க்கும் மேற்பட்ட போலிபாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு இப்பிரச்சினை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் இறந்தது குறித்தும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் குறித்தும் அவர் ஆளுநரிடம் எடுத்துரைத்தாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in