அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு: பெங்களூருவில் ஓய்வு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைஅண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு: பெங்களூருவில் ஓய்வு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு லேசான காய்ச்சல் காரணமாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலையை கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இணைப் பொறுப்பாளராக பாஜக தலைமை நியமித்துள்ளது. இதனால் ஓரிரு நாட்களுக்கு முன்பு தேர்தல் பணியாற்றுவதற்காக அவர் பெங்களூரு சென்றிருந்தார். அங்கு தேர்தல் முன்னேற்பாடுகள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஓய்வின்றி கட்சி பணிகளில் ஈடுபட்டதால் அண்ணாமலைக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் பெங்களூருவில் சிகிச்சை பெற்று அவர் தங்கியிருந்த ஓட்டலிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இதற்கிடையில், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை நேற்றுபங்கேற்பதாக இருந்தது. அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அந்த நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இதனால் அந்த நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. ஓய்வில் இருக்கும் அண்ணாமலை, ஓரிரு நாளில் சென்னை திரும்புவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in