அதானி பிரச்சினையை திசை திருப்ப அண்ணாமலை ஏதேதோ பேசுகிறார்: துரை வைகோ

துரை வைகோ
துரை வைகோஅதானி பிரச்சினையை திசை திருப்ப அண்ணாமலை ஏதேதோ பேசுகிறார்: துரை வைகோ

அதானி பிரச்சினையைத் திசை திருப்பவே அண்ணாமலை ஏதேதோ பேசி வருவதாக மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான சமீபத்திய வதந்திகள், வன்முறை, அமைதி இன்மை, மொழி அடிப்படையில் வெறுப்பு ஆகியவற்றைப் பரப்புவதற்கான முயற்சி ஆகும். இது தமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்கவும், நாசமாக்கவும் செய்யும். மேலும் இந்தி பேசும் மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் முயற்சியாகவும் இதைச் செய்துள்ளனர்.

வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவ பாஜக தான் காரணம். ஆனால், அண்ணாமலையோ அதற்கு திமுக கூட்டணி கட்சிகளே காரணம் எனப் பேசி வருகிறார். அவரைப் பொறுத்தவரை அதானி பிரச்சினையை திசைத் திருப்பவே இப்படி ஏதேதோ பேசி வருகிறார்.”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in