வளர்ச்சியே இல்லாத பகுதி வடசென்னை தான்... அண்ணாமலை குபீர் குற்றச்சாட்டு!

வடசென்னையில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
வடசென்னையில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

வடசென்னையில் மக்களவைத் தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னையிலேயே வளர்ச்சி இல்லாத பகுதி வடசென்னை என குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத்தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் தயாராகி வரும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக தேர்தல் பணிமனைகளைத் திறந்து வருகின்றனர். தேர்தல் நடைபெறும் காலம் வரையிலும் இந்த பணிமனைகளில் இருந்து அரசியல் கட்சியினர் தேர்தல் வேலைகளைக் கவனிப்பார்கள். அந்த வகையில் பாஜக சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் பாஜக சார்பில் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது.

வடசென்னையில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
வடசென்னையில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

ஆனால் வணிக ரீதியாக பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொண்டு தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, அந்த அலுவலகம் திறக்கப்பட்ட 2வது நாளில் சீல் வைத்தனர். இதையடுத்து வேறு இடத்தில் தேர்தல் பணிமனை அமைக்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டிருந்தனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இந்நிலையில் சென்னை வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் பாஜகவின் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையிலேயே வளர்ச்சி இல்லாத பகுதி வடசென்னை தான். இங்கு தான் சென்னையின் பூர்வீக மக்கள் வசித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்து திட்டங்களும் இந்த பகுதிக்குச் சென்று சேர வேண்டும். அதற்காகவே, இங்கு நிற்கும் என்டிஏ வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in