
’’ஊர் குருவி உயர பறந்தாலும் பருந்தாக முடியாது என்பதை அண்ணாமலை உணர்ந்து வாய் அடக்கத்துடன் பேச வேண்டும்’’ என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வந்த போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘’ மறைந்த புரட்சித்தலைவர் மற்றும் அம்மா இருபெரும் தலைவர்களும் மக்களுக்காக அவதாரம் எடுத்து வந்தவர்கள். அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். அதனால் அவர்களுடன் யாரும் தன்னை ஒப்பிட்டு பேசக்கூடாது.
ஊர் குருவி எவ்வளவு உயர பறந்தாலும் பருந்தாக முடியாது. அதுப் போலத்தான் அண்ணாமலையும். பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் பேசி வருகிறார். என்னை பொறுத்தவரை அண்ணாமலைக்கு வாய் அடக்கம் தேவை’’ என்றார்.