அதிமுக கூட்டணி முறிவு குறித்து அறிக்கை எதிரொலி! நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு

நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு
நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு

அதிமுக கூட்டணி முறிவு குறித்து கட்சித் தலைமைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுப்பிய நிலையில், அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வந்தது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே கடும் வார்த்தை போல் நடந்து வந்தது. குறிப்பாக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா குறித்தும் அறிஞர் அண்ணாவை குறித்தும் அண்ணாமலை கூறி குற்றச்சாட்டு அதிமுகவினரை மேலும் கொதிப்படைய வைத்தது. இதன் விளைவு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக திடீரென அறிவித்தது.

இதனை எதிர்பார்க்காத பாஜக தேசிய தலைமை அதிர்ச்சி அடைந்தது. மீண்டும் கூட்டணியை ஏற்படுத்த பாஜக தேசிய தலைமை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் பேச முயன்றது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக உடனடியாக கூட்டணி முறிவு குறித்து விளக்கம் அளிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து அவர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதோடு கூட்டணி முறிவு குறித்தும் அவர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

முன்னதாக அதிமுக கூட்டணி முறிவு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்சி தலைமைக்கு அறிக்கை ஒன்றை அளித்தார். அதிமுகவுடனான கூட்டணி முறிவு பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லியில் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அதிமுகவுடன் கூட்டணி முறிவு குறித்து பேசியதாக தெரிகிறது. தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in