திருச்சியில் பரோட்டா போட்ட அண்ணாமலை
திருச்சியில் பரோட்டா போட்ட அண்ணாமலை

மணப்பாறையில் முறுக்கு... திருச்சியில் பரோட்டா... அதகளம் செய்யும் அண்ணாமலை!

திருச்சியில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓட்டல் ஒன்றில் பரோட்டா போட்ட சம்பவத்தால் கட்சியினர் உற்சாகமடைந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நடத்தி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டையில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி வ.உ.சி நகரிலிருந்து அண்ணா வளைவு வரை நேற்று பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவரிடம் பாரத மஸ்தூர் சங்கத்தின் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

திருச்சியில் பரோட்டா போட்ட அண்ணாமலை
திருச்சியில் பரோட்டா போட்ட அண்ணாமலை

அதில், “ எண்ணூரில் ரூ.442.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ளா அனல் மின்சார உற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணியை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளனர். அதை பெல் நிறுவனத்திற்கு வழங்கியிருக்க வேண்டும். திருச்சி பெல் நிறுவனத்தில் கடந்த 2019ம் ஆண்டு, அக்டோபர் 31ம் தேதி பெல் நிறுவன ஊழியர்களின் ஊதியப்பணம் ரூ.1.43 கோடி திருடு போனது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

திருச்சியில் பரோட்டா போட்ட அண்ணாமலை
திருச்சியில் பரோட்டா போட்ட அண்ணாமலை

இந்நிலையில், அப்பகுதியில் இருந்த ஓட்டல் ஒன்றில் பரோட்டா போடுவதை பார்த்த அண்ணாமலை, அக்கடைக்குச் சென்று பரோட்டா போடுவதாக தெரிவித்தார். இதையடுத்து, பரோட்டா மாஸ்டரிடம் கேட்டு பரோட்டா போட்டதை, அங்கிருந்த கட்சியினர் கைத்தட்டி உற்சாகமாக ரசித்தனர். இதற்கு முன்பு மணப்பாறையில் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை அங்கு முறுக்குச் சுட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in