நடைபயணத்தில் முறுக்கு சுட்ட அண்ணாமலை! பிரதமருக்கு பார்சல் கொடுத்த கடைக்காரர்!

மணப்பாறையில் முறுக்கு சுட்ட அண்ணாமலை
மணப்பாறையில் முறுக்கு சுட்ட அண்ணாமலை

மணப்பாறையில் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் போது, முறுக்குக் கடை ஒன்றில் அண்ணாமலை முறுக்கு சுட்டு, அதை சுவைத்துப் பார்த்தார். அப்போது, பிரதமர் மோடிக்கு வழங்குமாறு கடைக்காரர் முறுக்கு பார்சல் ஒன்றை வழங்கினார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மணப்பாறையில் நேற்று ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஒரு பகுதியாக நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் சாதாரண மக்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டி விளையாட்டு என்று தடைசெய்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடைவிலக காரணம் மோடி மட்டும்தான். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட குடும்ப கட்சியினர் மோடியை எதிர்த்து கூட்டணி அமைத்துள்ளனர். மது அருந்துபவர்களால் வீட்டுக்கு செல்ல வேண்டிய சம்பளபணம், திமுகவினரின் சாராய ஆலைக்கு செல்கிறது. இதனால் தான் குடியை நாங்கள் எதிர்க்கிறோம். குடிநோய் மையங்களில் அமைச்சர்களே அட்மிட் ஆகும் நிலையில் தமிழகத்தின் குடி கலாச்சாரம் இருக்கிறது” என்றார்.

மணப்பாறையில் முறுக்கு சுட்ட அண்ணாமலை
மணப்பாறையில் முறுக்கு சுட்ட அண்ணாமலை

மேலும், “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி 93 முறை பல ஆட்சிகளை டிஸ்மிஸ் செய்துள்ளது. ஆனால், மோடி எந்த ஆட்சியையும் கலைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கி உள்ளது.

டிஎன்பிஎஸ்சியில் ஊழல் நடப்பதால் வேலை தரவில்லை. 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலை தருவதாக கூறிய பிரதமர் மோடி, இதுவரை 8.50 லட்சம் பேருக்கு வேலை அளித்துள்ளார். பாஜகவினரை கைது செய்வதுதான் தமிழக காவல் துறையின் முக்கியமான வேலை. தமிழகத்தில் காவல் துறையை வைத்து சர்வாதிகார ஆட்சியை திமுக நடத்தி வருகிறது” என்று அண்ணாமலை பேசினார்.

மணப்பாறையில் முறுக்கு சுட்ட அண்ணாமலை
மணப்பாறையில் முறுக்கு சுட்ட அண்ணாமலை

இதை தொடர்ந்து மணப்பாறை காமராஜர் சிலை அருகே முறுக்குக் கடை ஒன்றில் அண்ணாமலை முறுக்கு சுட்டு, அதை சுவைத்துப் பார்த்தார். அப்போது, கடைக்காரர், அண்ணாமலைக்கு முறுக்கு சுட கற்றுக்கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடிக்கு வழங்குமாறு கடைக்காரர் முறுக்கு பார்சல் ஒன்றை வழங்கினார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!

தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!

அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in