'அதற்கு ஆளுநர் கையெழுத்து போடமாட்டார்'... அண்ணாமலை நம்பிக்கை!

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
Updated on
2 min read

விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று கூறுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்தவித அருகதையும் கிடையாது எனவும், அப்படி பேசும் உதயநிதி ஸ்டாலின் எதற்காக சனாதனத்தை பற்றி மட்டும் விமர்சிக்கிறார் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நேற்றைய தினம் திமுக நடத்திய மகளிர் மாநாட்டில், தனது தந்தை மற்றும் உறவினர்களை வைத்து அரசியலுக்கு வந்தவர்கள் பிரதமர் மோடி பற்றி பேசுகிறார்கள். இதுவரை 33 சதவீத இடஒதுக்கீடு பற்றி பேசாதவர்கள் பேசுவதையெல்லாம் எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை.

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதை விட திமுகவை வளர்க்கிறார்கள். எந்தவித பின்னணியும் இல்லாமல் தடைகளை உடைத்து அரசியலுக்கு வரும் சாதாரண பெண்மணிகளுக்காக 33 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ள சூழலில் இவர்களுக்கு அதைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

அண்ணாமலை
அண்ணாமலை

திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று திமுக பகுதி செயலாளர் மிரட்டல் விடுத்த நிலையில் நேற்று மகளிர் உரிமை மாநாட்டை நடத்துகின்றனர். பத்திரிகையாளர்கள் யாரையும் நான் புண்படுத்தவில்லை.

போலி பத்திரிகையாளர் சங்கங்கள் பல முறை என்னைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. கடுமையாக கேள்வி கேட்கிறார்கள் எனவே, அதற்கு கடுமையாக பதில் சொல்கிறேன். அவ்வளவே. நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு நான் என்றும் ஆதரவாக இருப்பேன். போலி பத்திரிக்கையாளர்கள் என்னை விமர்சனம் செய்வதை நான் என்றும் கண்டுகொள்ளமாட்டேன்.

அண்ணாமலை
அண்ணாமலை

பாஜகவை பொருத்தவரை தமிழகத்தில் கட்சியை வலிமைப்படுத்தவே மாநிலம் முழுவதும் சட்டமன்ற தொகுதிகள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் திமுகவினர். அவர்களை எதிர்த்து ஆக்கப்பூர்வமாக தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டியது ஒரு எதிர்க்கட்சியின் கடமை என்பதால் அதைத்தான் பாஜக செய்கிறது.

பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுவதெல்லாம் அவரது சொந்த கருத்து. இன்னொரு கட்சியின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி குறித்த கேள்விகளுக்கும் அவர்கள் பேசுகின்ற கருத்துகளுக்கும் தேசிய தலைமையே கருத்து சொல்லும்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் கண்ணியமான இருக்கையில் இருக்கிறார். 2 முறை சட்டசபையில் பேச வானதி சீனிவாசன் முயன்றும் பேச அனுமதிப்பதில்லை. முதலில் சபாநாயகர் தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டு அனைவருக்கும் கட்சி பாகுபாடுன்றி சட்டபேரவையில் பேச வாய்ப்பளிக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் டிவி நிகழ்ச்சியின் விவாதத்தில் பேசுவது போல சபாநாயகர் தனது சொந்த கருத்தையெல்லாம் பேசுகிறார். தீவிரவாதிகளுக்கு மதச்சாயம் பூச பாஜக விரும்பவில்லை. தீவிரவாதம் செய்ய நினைத்தவர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும். ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார். தீவிரவாதத்திற்கு அவர் என்றும் துணை நிற்க மாட்டார்” என்றார்.

கோவை விமான நிலையத்தில்  பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in