கோவையில் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?... வெளியானது அதிர்ச்சி கருத்துக் கணிப்பு!

கோவையில் அண்ணாமலை
கோவையில் அண்ணாமலை

கோவையில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மூன்றாவது இடம் தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியுடன் அண்ணாமலை
பிரதமர் மோடியுடன் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் களத்தில் உள்ளனர். கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் நான் வெற்றி பெற்று காட்டுவேன் என்று அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

ஆனால், இங்கு திமுக - அதிமுக இடையே தான் போட்டி, அண்ணாமலை தங்களுக்கு போட்டியே இல்லை என்று திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். தொகுதியில் உள்ள அனைத்து பூத்துகளுக்கும்  ஏஜென்டை முதலில் பாஜக நியமிக்கட்டும்,  பிறகு போட்டி பற்றி பேசட்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி பாஜகவை விமர்சித்துள்ளார். 

அண்ணாமலை வேட்புமனு தாக்கல்
அண்ணாமலை வேட்புமனு தாக்கல்

ஆனாலும், அண்ணாமலை பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் அவருக்கு அமோக வரவேற்பு தரப்படுகிறது. ஏராளமான கட்சிக்காரர்கள் அங்கு குவிகிறார்கள். அதனால் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று பாஜகவினர் நம்பிக்கையுடன் செயலாற்றி வருகின்றனர். இந்தநிலையில் கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

பிரபல கருத்து கணிப்பு நிறுவனமான சி வோட்டர் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த சுரேஷ்குமார் என்பவரது  அக்னி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் சார்பாக இந்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை தொகுதியில்  திமுக கூட்டணி 47 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதிமுக கூட்டணிக்கு  31 சதவீத வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 16 சதவீத வாக்குகளும், நாம் தமிழர்.கட்சிக்கு  4 சவீத வாக்குகளும்,  மற்றவர்களுக்கு  2 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோவையில்  போட்டியிடும் அண்ணாமலைக்கு மூன்றாவது இடமே கிடைக்கும் என்ற இந்தக் கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருப்பதால் பாஜகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in