அண்ணாமலை அரசியல் கோமாளி: அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்

அண்ணாமலை அரசியல் கோமாளி: அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்

சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவில் இருக்கும் நடிகைகளை கொச்சைப்படுத்திப் பேசினார். இது சர்ச்சையானது. இதில் பேச்சாளர் சைதை சாதிக் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய பொதுக்கூட்டத்தில் சைதை சாதிக் பேசியபோது, அமைச்சர் மனோ தங்கராஜூம் மேடையில் இருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் மனோதங்கராஜ் இன்று இதுகுறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒரு மாநிலத்தில் நடக்கும்போது, ஆளுநர் ஒருகட்சியின் கைப்பாவையாக செயல்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் எல்லைகளை அறிந்து ஆளுநர்கள் மாநிலத்தின் நன்மைக்காக செயல்பட வேண்டும். ஆளுநரை யார் இயக்குகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். அவர்கள் அதைக் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

பெண்களுக்காக போராட்டம் நடத்தும் தகுதியே பாஜகவுக்கு இல்லை. குஜராத்தில் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களைக் கொலைசெய்துவிட்டு, கர்ப்பிணி பெண்களை பலாத்காரம் செய்து நீதிமன்றத்தில் தண்டிக்கப்படாமல் விடுதலை ஆகிவந்தபோது வரவேற்பு அளித்த இயக்கம் பாஜக. அக்கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அரசியல் கோமாளி. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பின்னும் அண்ணாமலை தங்களை விளம்பரப்படுத்தும் வகையில் அரசியல் கோமாளியாகச் செயல்படுவது அட்டூழியம்போல் உள்ளது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in