
திருப்பூர் மாவட்டத்தில் ’என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற் கொண்ட அண்ணாமலை நள்ளிரவில் சாலையோரம் காரில் அமர்ந்தபடியே இரவு உணவை உட்கொண்டார். அவரது விசுவாசிகள் அதையும் போட்டோ எடுத்து டிரெண்டாக்கி வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக ’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் தழுவிய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது திருப்பூர் மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நேற்று பல்லடம், அவிநாசி உள்ளிட்ட இடங்களில் இரவு வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். நடைபயணத்தின் போது அவருடன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர் பங்கேற்றனர்.
அண்ணாமலை நடைப்பயணத்தின் போது கோவை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சங்கீதா, திடீரென மயங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதை தொடர்ந்து 10.30 மணியளவில், சோமனூர் பேருந்து நிலையம் அருகே வந்த அண்ணாமலை, அங்கு இரவு 11.45 மணி வரையிலும் உரை நிகழ்த்தினார்.
இதன் பின்னர் கோவை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தனது காரை நிறுத்திய அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் காரில் அமர்ந்தபடியே இரவு உணவை சாப்பிட்டனர். இந்த புகைப்படங்களை பாஜகவினர் தற்போது இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்
10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!
ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!
அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!