ராகுலின் நடைபயணத்தைப் பற்றிப் பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை: தங்கபாலு பேட்டி

ராகுலின் நடைபயணத்தைப் பற்றிப் பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை: தங்கபாலு பேட்டி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. இதனையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து காங்கிரஸ் கட்சியினர் வந்துள்ளனர். அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தங்கபாலுவும் வந்திருந்தார்.

அவர் இன்று மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, பாஜகவின் எட்டாண்டு ஆட்சியில் மக்கள் சாதி, மத ரீதியாக மக்கள் பிளவுபட்டுள்ளனர். அனைத்து மக்களிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தும்வகையில் ராகுல் காந்தி நடைபயணம் செல்கிறார். ராகுல் காந்தியின் பாத யாத்திரை பற்றிப்பேச பாஜகவின் அண்ணாமலைக்குத் தகுதி இல்லை. கடந்த 8 ஆண்டு ஆட்சியில் பாஜக எந்த புதியத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அந்தத் திட்டங்களை பாஜக அழித்து வருகிறது. மோடி புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. அனைவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாகச் சொன்னார். அதையும் செய்யவில்லை. பாஜக அரசு குறிப்பிட்ட நான்கு பேருக்காக பல லட்சம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்துள்ளது என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in