சபரிமலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தரிசனம்

சபரிமலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தரிசனம்

பாஜக தலைவர் அண்ணாமலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று தரிசனம் செய்தார். அவர் பக்தர்களோடு, பக்தராக வரிசையில் நின்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது கடந்த நவம்பர் 17-ம் தேதி மண்டல மகர விளக்கு பூஜைக்காகத் திறக்கப்பட்டது. அப்போது இருந்து இதுவரை 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து உள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு விரதம் இருந்து மாலை போட்டிருந்தார். இந்நிலையில் ஒரு மண்டல விரத காலத்தை மேற்கொண்ட அண்ணாமலை இன்று காலையில் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் அண்ணாமலை கீழ் சாந்தி ஸ்ரீகாந்த் நம்பூதியுடனும் புகைப்படம் இணைத்துக் கொண்டார். அந்தப் புகைப்படம் கேரளத்தில் வைரல் ஆகிவருகிறது.

இந்நிலையில் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களில் சிலர் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு போஸ்டர்களுடன் வந்து புகைப்படம் எடுக்கின்றனர். அப்படி வரும் பக்தர்களை 18-ம் படி வழியாகத் தரிசனம் செய்ய அனுமதிக்கக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து டிரம்ஸ் உள்ளிட்டவற்றை இசைக்கவும் தடைவிதித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in