`மழையால் மக்கள் அவதிப்படும்போது, முதல்வர் சினிமா பார்த்துக்கொண்டிருந்தார்’: சொல்கிறார் அண்ணாமலை

`மழையால் மக்கள் அவதிப்படும்போது, முதல்வர் சினிமா பார்த்துக்கொண்டிருந்தார்’: சொல்கிறார் அண்ணாமலை

``முதல்வர் ஸ்டாலினை நம்பி அவரின் மனைவியே செல்போனை கொடுக்கவில்லை என்றாலும் அவரை நம்பி தமிழ்நாட்டையே கொடுத்திருக்கிறோம்'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆவின் பால்விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அண்ணாமலை,“ ‘லவ் டுடேன்’னு ஒரு படம் ரிலீஸான போது உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல் இது. ‘இந்த படமும் நாமதான் ரீலிஸான்னு அப்பா கேட்டாரு. ஆமாம்பான்னு சொன்னேன். அந்த படமும் நாமதான் ரிலீஸான்னு கேட்டார். ஆமாம்பான்னு சொன்னேன். ‘லவ் டுடே’ படம் ரிலீஸாகி ஒரு வாரம்தான் ஆகுது. நீங்களும் அம்மாவும் பாருங்கப்பான்னு சொன்னேன். எங்க அப்பாவும் அம்மாவும் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தைப் பார்த்தாங்க’ன்னு உதயநிதி சொல்றார். தமிழ்நாட்டில் வரக்கூடிய அனைத்துப் படங்களையும், 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரன் போல புடுங்கிப் புடுங்கி அனைத்துப் படத்தையும் ரிலீஸ் செய்வதிலும் இவர்கள்தான் நம்பர் ஒன்.

சென்னையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல், கடைக்குப் போய் சாப்பிட முடியாமல், ஒரு டீ குடிக்கக் கூட முடியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் போது, நம்முடைய முதலமைச்சர் மட்டும் 3 மணி நேரம் ‘லவ் டுடே’ படத்தை நேரம் ஒதுக்கிப் பார்த்திருக்கிறார். காதலிக்கக் கூடிய இரண்டு பேர் செல்போனை மாற்றிக் கொள்வதுதான் படத்தின் கதையாம். ரொம்ப அருமையான படம் எடுத்திருக்கிறாய் என்று உதயநிதியை ஸ்டாலின் பாராட்டினாராம். ஒரு சமூக மாற்றத்திற்கான படம். இதைப் பார்த்த உடனே தமிழகத்தில் சமூக நீதி வரப்போகிறது. தமிழகத்தில் ஆறு மாதிரி பால் பொங்கி ஓடப் போகிறது. மக்களுடைய வாழ்வாதாரம் உயரப் போகிறது என்பதைப் போல படம் எடுத்திருக்கிறார் உதயநிதி.

அதில் உச்சபட்ச காமெடி என்ன வென்றால், நாமும் செல்போனை மாற்றிக் கொள்ளலாமா என முதல்வரும் துணைவியாரிடம் கேட்டாராம். எங்களை விட்டுடுங்கன்னு சொல்லிவிட்டு நாங்களும் எங்க அம்மாவும் ஓடிப் போய்ட்டோம்னு உதயநிதி சொன்னாராம். அதாவது உங்களை நம்பி உங்களின் மனைவி செல்போனை கொடுக்காவிட்டாலும், உங்களை நம்பி தமிழ்நாட்டை நாங்கள் உங்களிடம் கொடுத்திருக்கிறோம். அந்த கொடுமைகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

நேற்று வண்டிய எடுத்துக்கிட்டு மயிலாடுதுறை பக்கம் முதல்வர் போய் இருக்கிறார். போன வருடம் அவர் போன போது மழையில் விவசாயிகளின் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் போது, முதல்வருக்கு மட்டும் சிவப்பு கம்பளம் விரித்து அதில் நடந்துபோய் பார்வையிட்டார். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது வயல்வெளியில் கான்கிரீட் போட்டு ஷூட்டிங் எடுத்த முதல்வர், போன வருடம் வயல்வெளியில் ரத்தின கம்பளம் விரித்து நடந்த முதல்வர் இன்று ஏசி காரில் உட்கார்ந்து விவசாயிகளிடம் பேசி இருக்கிறார். இதுதான் தமிழகம் கண்ட முன்னேற்றம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in