வசைபாடிய நிர்மல்குமாருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

அண்ணாமலை, நிர்மல்குமார்.
அண்ணாமலை, நிர்மல்குமார்.வசைபாடிய நிர்மல்குமாருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக பொறுப்பு வகித்தவர் நிர்மல் குமார். இவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,"கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கற்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.

2019-ம் ஆண்டில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20 சதவீதம் கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது. திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு 420 மலையாக இருக்கும் நபரால், தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப்பெரியக் கேடு.”என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி நீண்ட கடிதம் எழுதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை வசை பாடியிருந்தார்.

காலையில் திமுக அரசு தன் மீது வழக்குப்பதிவு செய்தவுடன் திராணி இருந்தால் என் மீது கைவைத்துப் பாருங்கள் எனச் சொன்ன அண்ணாமலை, இவ்விஷயத்தில் அமைதியாக நிர்மல் குமாருக்கு வாழ்த்து மட்டும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில் “அன்பு சகோதரர் நிர்மல் குமாருக்கு வாழ்த்துகள். நீங்கள் எங்கு சென்றாலும் பணி சிறக்கட்டும் ”என வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in