‘விளக்கம் கொடுத்த பிறகும் கைது செய்வதா?’ - பாஜக நிர்வாகி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

சவுதாமணி பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே உள்நோக்கத்தோடு கைது செய்யப்பட்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவில் செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சவுதாமணி. கடந்த ஜனவரி மாதம் தனிப்பட்ட வகையில், தனக்கு யாரென்று தெரியாத ஒரு நபர் பேசிய வீடியோவைத் தன் ட்விட்டர் பக்கத்தில் சவுதாமணி வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துகள் இருந்தன. இதனால் சவுதாமணி மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சவுதாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

‘சவுதாமணியை திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்துள்ளது. சமூகவலைதளத்தில் யாரோ பதிந்த வீடியோவை, இவர் மற்றொருவருக்கு பகிர்ந்தார் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார். அதேநேரத்தில் நாட்டின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் பதவுகளைப் போடுபவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக உலா வந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்து உணர்வையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் கேலி கிண்டல் செய்து பதிவுகள் போடுவது இன்று வாடிக்கையாகிவிட்டது. மதுரையில் சமீபத்தில் நடந்த ஊர்வலத்தில் இந்துக் கடவுள்களைக் கொச்சைப்படுத்திப் பேசிக்கொண்டே சென்றனர். இவர்கள் மீதெல்லாம் பல்வேறு இடங்களில் புகார்கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரம் சவுதாமணி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்ட பிறகும் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார். இதைக் கண்டிக்கிறேன். திமுக அரசு, உடனே சவுதாமணியை விடுதலை செய்ய வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் அண்ணமலை கூறியிருக்கிறார்,

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in