கட்சிக்கு முழுக்கு போட்டவர்... சூர்யா சிவாவை மீண்டும் பாஜகவில் சேர்த்தார் அண்ணாமலை!

அண்ணாமலையுடன் சூர்யா
அண்ணாமலையுடன் சூர்யா

பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருந்த திருச்சி சூர்யா சிவா, அதிமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவரை மீண்டும் பாஜகவில் சேர்த்துக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, திமுக மீதும் தனது தந்தை மீதுமான அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைந்த அவர், மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான நபராக வலம் வந்தார். பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனிடையே, பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியுடன் சூர்யா சிவா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், டெய்சிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததுடன், காது கூசும் வகையில் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து மிகவும் தரக்குறைவாகவும் சூர்யா சிவா விமர்சித்திருந்தார்.

சூர்யா சிவா
சூர்யா சிவா

இதைத் தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சியில் 6 மாதங்கள் பங்கேற்க சூர்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து பாஜகவில் இருந்து விலகுவதாக சூர்யா சிவா அறிவித்தார். தொடர்ந்து சில காலம் அமைதியாக இருந்தவர், அண்ணாமலையின் பொய் பிம்பம் உடையும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் பரபரப்பை கிளப்பினார். அதன் தொடர்ச்சியாக, வருகிற 5 ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் சூர்யா சிவா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதன்பிறகு, அண்ணாமலையை பற்றி பல்வேறு விஷயங்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவா வுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக அக்கட்சியின் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அதில், "சூர்யா சிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!

பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!

வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in