
நடிகை காயத்ரி ரகுராம், கெளதமி உள்ளிட்டோர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ''நானும் அண்ணாமலையும் நாங்கள் இருவரும் ஒன்றாக அதிமுகவில் இணைகிறோம். செய்தியை சரியாக போடுங்கள்'' என காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம், தனது எக்ஸ் தளத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தனது கருத்துக்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கையோடு விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசினார். இதனால் விசிகவில் அவர் இணையப் போவதாக அப்போது செய்திகள் வெளியாகியது.
இந்த நிலையில், தீபாவளிக்கு முன்பாக நடிகைகள் காயத்ரி ரகுராம், கெளதமி இருவரும் அதிமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அதனை மறுத்துள்ள காயத்ரி ரகுராம், ’’நானும் அண்ணாமலையும் ஒன்றாக அதிமுகவில் இணைகிறோம். செய்தியை சரியாக போடுங்கள்’’ என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்