
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அவர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாஸ்க் அணிந்த படி வருகை தந்தார். மருத்துவமனையில் இருந்து நேராக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றி வருகிறார்.
இதையும் வாசிக்கலாமே...