`எங்க முதல்வர் நீடுடி வாழ வேண்டும்'- திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்து வழிபட்ட அமைச்சர் ரோஜா!

`எங்க முதல்வர் நீடுடி வாழ வேண்டும்'- திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்து வழிபட்ட அமைச்சர் ரோஜா!

``என்னுடைய குடும்பத்தினரும் மட்டுமல்லாது, ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தினரும் நீடுடி வாழ வேண்டும்'' என முருகனுக்கு காவடி எடுத்ததாக ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகனுக்கு நேர்த்திக் கடன் செய்து வருகின்றனர். அந்த வகையில் முருகனின் ஐந்தாம் படைவீடு எனப் போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியன் கோயிலில் ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இரண்டாம் நாளான இன்று ஆடிபரணியையொட்டி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பரணி காவடியுடன் பக்தர்கள் மலைக் கோயிலில் குவிந்தனர்.

திருத்தணியில் நடைபெற்ற ஆடிக்கிருத்திகை விழாவில் நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தனது கணவர் செல்வமணி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது முருகனுக்குக் காவடி எடுத்து கோயிலில் வழிபட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, ``நானும் குடும்பத்தினரும் மட்டுமல்லாது, ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தினரும் நீடுடி வாழ வேண்டும் எனக் காவடி எடுத்தேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in