அந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டது: பதறும் எம்.பி

அந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டது: பதறும் எம்.பி

ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினர் கோரண்ட்லா மாதவ் என்பவர் பெண் ஒருவருடன் நிர்வாணமாகத் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி பேசும் வீடியோ ஒன்று வைரலாகி ஆந்திராவில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருப்பவர் கோரண்ட்லா மாதவ் . இவர் இந்துபுரம் தொகுதி மக்களவை உறுப்பினரான இருந்து வருகிறார். இந்நிலையில் பெண் ஒருவருடன் நிர்வாணமாகத் தனது உறுப்பைக் காட்டி அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ஆந்திர அரசியலில் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இந்த வீடியோ அந்த கட்சித் தொண்டர்கள் மத்தியில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இன்று இந்துபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கோரண்ட்டலா மாதவ் அந்த வீடியோ விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, “ தெலுங்கு தேசம் கட்சியினர் எனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டு திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நான் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறேன். இந்த வீடியோ தொடர்பாகக் காவல் துறையினரின் எவ்விதமான விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in