இன்று ஆந்திரா முழுவதும் பந்த்; 144 தடை உத்தரவு அறிவிப்பு!

சந்திரபாபு கைதால் ஆந்திராவில் வன்முறை
சந்திரபாபு கைதால் ஆந்திராவில் வன்முறை

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்றம் நிலவுகிறது. தமிழக எல்லையிலும் இந்த பதற்றம் தொடரும் நிலையில் ஆந்திராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஆந்திரா முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவை அழைத்து செல்லும் போலீஸார்
சந்திரபாபு நாயுடுவை அழைத்து செல்லும் போலீஸார்

ஆந்திராவில் திறன் மேம்பாட்டு வாரியத்தில் நடந்த 371 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சந்திரபாபு நாயுடு கொட்டும் மழைக்கு இடையே ராஜமுந்திரி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே விஜயவாடா நீதிமன்றம் முன்பு குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது.

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு இன்று தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. தெலுங்கு தேசம், மற்றும் ஜனசேனா கட்சியினரின் இந்த போராட்டத்தால் குப்பம் உள்ளிட்ட மாநிலத்தில் பல பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது.

இதே போல் ஆந்திர எல்லைப் பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in