திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை நவம்பர் 1ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த ஊழலால் அரசுக்கு ரூ.371 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தற்போது ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு இன்று ஆஜர்படுத்தப்பட்டார். சிறையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சந்திரபாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சந்திரபாபு நாயுடுவின் காவலை, வருகிற நவம்பர் 1ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் பணிகளில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!
மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!
’லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!
வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!