பெண் போலீஸ், எஸ்.ஐயைத் தாக்கிய ஆந்திரா முதல்வரின் தங்கை கைது!

பெண் போலீஸைத் தாக்கும் ஷர்மிளா.
பெண் போலீஸைத் தாக்கும் ஷர்மிளா.பெண் போலீஸ், எஸ்.ஐயைத் தாக்கிய ஆந்திரா முதல்வரின் தங்கை கைது!

பெண் போலீஸ்காரர் மற்றும் எஸ்.ஐயைத் தாக்கிய ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். தெலங்கானாவிலும் தங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா (ஒய்எஸ்ஆர்டிபி) என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியுள்ளார். அம்மாநில அரசுக்கு எதிராக நடைபயணம், போராட்டம் என தொடர்ந்து நடத்தி வருகிறார்.

சமீபத்தில் தெலங்கானா பொதுத் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாள்கள் கசிந்ததை எதிர்த்து ஷர்மிளா போராட்டங்களை நடத்தினார். இவ்வழக்கை விசாரிக்க சிறப்புக் குழுவை தெலங்கானா அரசு நியமனம் செய்துள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து ஷர்மிளா, விசாரணை நடத்தும் சிறப்பு குழுவின் அலுவலகத்துக்கு செல்ல தனது வீட்டை விட்டு வெளியே நேற்று வந்தார்.

அப்போது வீட்டின் வெளியே இருந்த போலீஸார், அவரை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், போலீஸாருக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஷர்மிளா, பெண் போலீஸ் ஒருவரையும், எஸ்.ஐ ஒருவரையும் அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் கைது செய்து, நாம் பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஷர்மிளாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in