`ஆளுநர் வேலை இது அல்ல'- விமர்சிக்கும் அன்புமணி

`ஆளுநர் வேலை இது அல்ல'- விமர்சிக்கும் அன்புமணி

``கிராமிய கலைகளை ஊக்குவிக்க கிராம ஊராட்சிகளுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டும்'' அன்புமணி ராமதாஸ் எனத் தெரிவித்தார்.

சிவகாசியில் நடந்துவரும் கிராமிய கலைநிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்த அன்புமணி தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தற்போது உள்ள இளம் தலைமுறையினர் மத்தியில் கிராமம் என்ற பார்வையை நல்லவிதமாக மாற்றும் வகையில் கிராமிய விழா நடத்தப்படுகிறது. கிராமிய கலைகளை ஊக்குவிக்க தமிழகத்தில் உள்ள 12,600 பஞ்சாயத்துகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தெருகூத்து கலையை தற்போதுள்ள மாணவர்கள் மறந்து விட்டார்கள். இளம் தலைமுறையினர் மத்தியில் சமூக வலைதளங்களில் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் தமிழர்களின் பாரம்பரியத்தை அவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என ஆளுநர் ரவி கூறிய கருத்து குறித்து குறித்து கேட்கிறீர்கள். ஆளுநர் வேலை இது அல்ல. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவிற்கு அனுமதி கொடுப்பதுதான் ஆளுநர் வேலை. தமிழக அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட கூடாது.  ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதவிற்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்யும் ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் கொள்கை முடிவை சொல்ல வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தில் தொடர் உயிரிழப்பிற்கு ஆளுநர்தான் காரணம். ஆளுநருக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை. ஆளுநர் தமிழக அரசின் நிர்வாகத்தை கண்காணிக்கலாம். ஆனால் அரசியலில் ஈடுபடக் கூடாது. விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்படவேண்டும் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in