`தமிழ்நாடா, தமிழகமா? என்பது ஆளுநரின் வேலை கிடையாது'- அன்புமணி விமர்சனம்

`தமிழ்நாடா, தமிழகமா? என்பது ஆளுநரின் வேலை கிடையாது'- அன்புமணி விமர்சனம்

"தமிழ்நாடா, தமிழகமா என்பது ஆளுநரின் வேலை கிடையாது. ஆளுநர் தேசிய கீதத்தில் திராவிடம் என்று வருகிறது அதை பாடாமல் விட்டு விடுவார? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பசுமை தாயகம் அமைப்பு சார்பில் இன்று "நொய்யல் ஆற்றை மீட்போம்" கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமான மூலம் நேற்று இரவு கோவைக்கு பாமக தலைவர் அன்புமணி வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என்ற முதற்கட்ட முயற்சி எடுக்கிறோம். அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம். அனைவரும் ஒன்று சேர வேண்டும். நொய்யல் நன்றாக இருந்தால்தான் கொங்கு மண்டலம் வளர்ச்சி பெறும்.

நொய்யல் ஆற்றில் 4.5 லட்சம் ஏக்கர் ஒரு காலத்தில் பாசனம் செய்தார்கள். இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம். பாரம்பரிய நீரை மீட்டெடுக்க வாருங்கள். நொய்யல் ஆற்றுக்கும் சோழர்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. தூர் வருவதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்து வருகிறது. ஆளுநரும் அரசியல் செய்யக்கூடாது. தமிழக அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும். ஆளுநரும் அரசியல் சாசனத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். வேறுவிதமான அரசியலில் ஈடுபடக்கூடாது.

தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சினை உள்ளது. இதை விட்டு தமிழ்நாடா, தமிழகமா, மத்திய அரசா, ஒன்றிய அரசா என இருக்கக்கூடாது. ஆன்லைன் விளையாட்டால் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வருகிறது. இது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை. ஏன் ஆளுநர் கையெழுத்து போடவில்லை. ஆளுநர் இதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடா தமிழகமா என்பது ஆளுநரின் வேலை கிடையாது. ஆளுநர் தேசிய கீதத்தில் திராவிடம் என்று வருகிறது அதை பாடாமல் விட்டு விடுவாரா. தேசிய கீதத்திற்கு முன்பு ஆளுநர் வெளியேறியது மரபுக்கு மீறிய செயல். ஒரு மாதமா இரண்டு படம் வருவதற்கு விவாதம் பண்ணுகிறீர்கள்.

நொய்யலை மீட்டெடுப்பதற்கு முன் அதை தொடங்குகின்ற காடுகளை மீட்டெடுக்க வேண்டும். அனைத்து கழிவுகளும் நேரடியாக நொய்யலுக்கு போகிறது.

சாயக்கழிவுகள் கணக்கே கிடையாது. தென் கொரியாவில், லண்டனில் இதுபோன்ற பாதிக்கப்பட்ட நதிகளை மீட்டெடுத்துள்ளனர். அதேபோல மீட்டெடுக்க வேண்டும். இந்த நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். வேண்டியவர்கள் என்று பார்க்கக்கூடாது. காலநிலை மாற்றம் பெரிய சவாலாக இருக்கும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in