3 ஆண்டுகளில் 152 பேர் பலி... அரசுக்கு எதிராக அன்புமணி ஆவேசம்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
Updated on
2 min read

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 152 பேர் யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான திட்டத்தை அரசு சிந்திக்க வில்லை எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 32 நாட்களில் மட்டும் யானைகள் தாக்கி 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் இதுவரை 152 பேர் யானைகள் தாக்கியதில் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யானை தாக்குதலில் 3 ஆண்டில் 152 பேர் உயிரிழப்பு
யானை தாக்குதலில் 3 ஆண்டில் 152 பேர் உயிரிழப்பு

அந்த அறிக்கையில், ‘மனித - விலங்கு மோதலுக்கு வனப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு, வனப்பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வது, யானைகள் வலம் வரும் பகுதிகள் மனிதர்களால் அழிக்கப்படுவது உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன.

கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட இந்த தவறுகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் சார்பில் மேற்கொண்ட போதும், எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. இனி கிடைக்குமா என்பது தெரியவில்லை. மனித - விலங்கு மோதலால் உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருள் இழப்புகளும் மிக அதிகமாக ஏற்படுகின்றன.

கிருஷ்ணகிரி அருகே அதிகரித்த யானை நடமாட்டம்
கிருஷ்ணகிரி அருகே அதிகரித்த யானை நடமாட்டம்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் புலிகள், யானைகள் தாக்கியதில் 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொருபுறம் வனவிலங்குகள் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன.

விலங்குகள் தாக்கிக் கொல்லப்படுவோரின் குடும்பங்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் விலங்குகளால் கொல்லப்படும் உயிர்களுக்கும், சேதமடையும் பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறுவதை தடுப்பது உடனடியாக சாத்தியமில்லை. ஆனால், வனத்தை விட்டு யானைகள் மற்றும் விலங்குகள் வெளியே வருவதை கண்காணித்து அவற்றை மீண்டும் வனத்திற்குள் அனுப்பி வைப்பது பயனளிக்கும் தீர்வாக இருக்கும்.

அதற்காக தனிப்படைகள் அமைக்க வேண்டியது கட்டாயம். இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை சிந்திக்கக் கூட இல்லை என்பது உண்மை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மனித - விலங்கு மோதல் பெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இதை சமாளிப்பதற்காக அங்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே தமிழ்நாடு வனத்துறையில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து காட்டுக்குள் மீண்டும் அனுப்புவதற்காக தனிப்படைகள் அமைக்க வேண்டும். வனப்பகுதிகளின் பரப்பளவை குறைக்க வேண்டும். கோடை காலத்தில் வனத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க முன்கூட்டியே வனப்பகுதிகளில் ஆய்வு செய்து தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் மனித - விலங்கு மோதல் நிகழாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார் அன்புமணி.

இதையும் வாசிக்கலாமே...


விவசாயிகள் திடீர் முடிவு... 'டெல்லி சலோ' போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு!

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம்?... திமுக நாளை கலந்தாலோசனை!

குட்நியூஸ்... பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு நாளை முதல் ஆதார் பதிவு!

கைது நடவடிக்கைக்கு பயந்து, இரவு முழுவதும் கட்சி அலுவலகத்தில் தங்கிய காங்கிரஸ் தலைவர்!

50 லட்சம் பக்தர்கள் தரிசனம்... அயோத்தி ராமர் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in