அன்புஜோதி ஆசிரமம் வழக்கு விசாரணை: சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்

அதிகாரிகள் விசாரணை
அதிகாரிகள் விசாரணைஅன்புஜோதி ஆசிரமம் வழக்கு விசாரணை; சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்

அன்புஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ள நிலையில், ஏடிஎஸ்பி கோமதி மேற்பார்வையில் நான்கு காவல் ஆய்வாளர் அடங்கிய விசாரணை குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களிடம் பாலியல் அத்துமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் ஆசிரமத்தில் இருந்த ஆதரவற்றவர்கள் 15 பேர் மாயமானதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரம உரிமையாளர் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் நான்கு காவல் ஆய்வாளர்கள் அடங்கிய குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிபிசிஐடி போலீஸார் களத்தில் இறங்கி விசாரணை படலத்தை தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in