விட்டுப்போனது பன்றிக் காய்ச்சல்; வீடு திரும்பிய அன்பில் மகேஷ்!

விட்டுப்போனது பன்றிக் காய்ச்சல்; வீடு திரும்பிய அன்பில் மகேஷ்!

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடுமையான காய்ச்சல் காரணமாக நேற்று முன் தினம் சென்னை, காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. காய்ச்சல் குணமடைந்து, உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார். இதைத் தொடர்ந்து சில தினங்கள் அவர் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in