ஏழை மாணவர்களைப் போட்டித் தேர்வுக்குக் கட்டாயப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

பள்ளிக் கல்வித்துறை சார்பாகப் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றுதான் சொல்லி இருக்கிறோம். அதை நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று தவறாகச் சொல்கிறார்கள் எனப் பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பழுதான பள்ளி கட்டிடங்கள், மின் இணைப்பு பெட்டிகள், சுற்றுச்சுவர் என அனைத்தையும் சரிபார்க்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளோம். மழைக்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளிக் கல்வித்துறை சார்பாகப் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றுதான் சொல்லி இருக்கிறோம். ஆனால், அதை நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தவறாகச் சொல்கிறார்கள். போட்டித் தேர்வு என்றால் ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் உள்ளன.

பணம் கட்டிப் படிக்க முடியாத பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நாங்கள் இதைச் செய்கிறோம். திமுக மட்டுமல்ல ஒட்டு மொத்த கட்சிகளும் சேர்ந்துதான் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி இருக்கிறோம். நீட் விலக்கு பெறுவதற்கான சட்டப் போராட்டம் நடைபெறும் நிலையில், ஏழை மாணவர்களைப் போட்டித் தேர்வுக்குக் கட்டாயப்படுத்த வேண்டிய தேவையும், கடமையும் எங்களுக்கு இருக்கிறது. நீட், மும்மொழிக் கொள்கை என எதெல்லாம் நமக்குத் தேவையில்லையோ அதை வலியுறுத்தி மத்திய அரசிற்குத் தமிழக அரசின் சார்பாகக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in