முஸ்லிம்களுக்காக தனி ஐடி பார்க் உருவாக்குவது சாத்தியமில்லாத வாக்குறுதி - டிகே சிவகுமார் விமர்சனம்!

டிகே சிவக்குமார்
டிகே சிவக்குமார்

முஸ்லிம்களுக்கு தனி ஐடி பார்க் உருவாக்க போவதாக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ள நிலையில், முஸ்லிம்களுக்காக ஐடி பார்க் உருவாக்குவேன் என சாத்தியமில்லாத வாக்குறுதியை அவர் தந்திருக்கிறார் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஆளும் பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்காக ஐடி பார்க் உருவாக்கப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்தார். இந்த அறிவிப்புக்கு தெலங்கானா மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சந்திரசேகர் ராவ் -தெலங்கானா
சந்திரசேகர் ராவ் -தெலங்கானா

மேலும், தெலங்கானா மாநிலத்தில் மீண்டும் பிஆர்எஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் மாணவர்கள் தங்கி படிக்கும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும், முஸ்லிம் இளைஞர்களுக்கு தனியாக ஐடி பார்க் உருவாக்கப்படும், இந்த ஐடி பார்க் ஹைதராபாத் அருகே அமைக்கப்படும் என்றும் முதல்வர் கேசிஆர் கூறியிருந்தார்.

டி.கே. சிவக்குமார்
டி.கே. சிவக்குமார்

ஆனால், இதனை கர்நாடக மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “முஸ்லிம்களுக்கான ஐடி பார்க் எப்படி சாத்தியமாகும். சிறுபான்மையினருக்காக என்று தனியாக ஐடி பார்க்க அமைக்க முடியுமா?. ஒட்டுமொத்த நாட்டில் இது போன்ற ஒரு கொள்கையை நான் கேள்விப்பட்டதே இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in