பூரண கும்பமரியாதை, முழங்கிய தாரை தப்பட்டை: எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் ஆதரவாளர்கள்!

பூரண கும்பமரியாதை, முழங்கிய தாரை தப்பட்டை: எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் ஆதரவாளர்கள்!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது இல்லத்திலிருந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபம் வரையிலும் தாரை தப்பட்டைகளுடன் அதிமுகவினர் தடபுடலாக வரவேற்பளித்து மரியாதை செய்தனர்.

முன்னதாக அவரது வீட்டின் முன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவரை வாழ்த்தி முழக்கமிட்டனர். அவரது வீட்டிற்கு வெளியே சிவப்பு புடவை அணிந்து பெண்களும், சிவாச்சாரியார்களும் பூரண கும்ப மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து வானகரம் ஸ்ரீவாரு மண்டபம் வரையிலும் அதிமுகவின் அந்தந்த பகுதி செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கள் பகுதியில் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பளித்தனர். வழி நெடுகிலும் அதிமுக தொண்டர்கள் அதிமுக கொடியுடன் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு அளவுக்கு இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வெகு உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். ஒற்றைத் தலைமை பொறுப்புக்கு எடப்பாடி வந்தாலும், வராவிட்டாலும் அவரை பொதுச் செயலாளராக முழுமனதாக அதிமுகவினர் ஏற்றுக்கொண்டு விட்டதாகவே இந்த வரவேற்புகள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in