அரசு பேருந்தில் ஓசியில் செல்ல மாட்டேன் என்று கூறிய மூதாட்டி யார் தெரியுமா?- வெளிச்சத்துக்கு வந்த நாடகம்!

கண்டக்டரிடம் மல்லுக்கட்டும் மூதாட்டி
கண்டக்டரிடம் மல்லுக்கட்டும் மூதாட்டி

சமூக வலைதளங்களில் எவ்வளவு வேகமாக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன என்பதற்கு அரசு பேருந்தில் 'நான் ஓசியில் போக மாட்டேன், டிக்கெட் கொடு' என்று அடம் பிடித்த மூதாட்டியின் வீடியோ ஒன்று சாட்சியாக அமைந்திருக்கிறது.

அரசுப் பேருந்தில்  பெண்கள் இலவசமாக பயணம் செய்வதை குறித்து  ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  'ஓசியில் தானே வந்தீங்க' என்று  கேட்டது வலைதளங்களில் வைரல் ஆகியது. அதை வேகமாக பரப்பி திமுகவுக்கு கெட்ட பெயரை உண்டாக்க அதிமுகவினர் முயன்றனர். அவர்களின்  அந்த முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் இன்று காலை முதல் அரசு பேருந்தில் பயணித்த ஒரு மூதாட்டி நான் ஓசியில் போகமாட்டேன், டிக்கெட் கொடு என்று அடம் பிடித்த வீடியோ ஒன்று மிகவும் வேகமாக பரவி தமிழகத்தையே கலங்கடித்தது. 

கோவை மாவட்டம், மதுக்கரையில் இருந்து பாலக்கரை நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் மூதாட்டி ஒருவர் “ஓசியில் பயணம் செய்ய மாட்டேன், காசு கொடுக்கிறேன் சீட்டு கொடு” என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

அந்த வீடியோவில்,  காசு வாங்காமல் ஓசியில் நான் வரமாட்டேன் தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் ஓசியில் போகட்டும். நான் போக மாட்டேன். என்னிடம் காசை வாங்கிக் கொண்டு சீட்டைக் கொடு, ஓசின்னு சொல்லிக் காட்டுகிறார்கள். எனக்கு ஊசி தேவையில்லை  என அடம்பிடிக்கிறார்.

இது இலவச பேருந்து. டிக்கெட் தர முடியாது என நடத்துனர் அவருக்கு விளக்கிச் செல்கிறார்.  ஆனால் மூதாட்டி தொடர்ந்து மறுப்பதால், ரூ.15 மதிப்புள்ள டிக்கெட்டை காசு வாங்கிக்கொண்டு நடத்துநர் தரும் காட்சிகள் உள்ள அந்த வீடியோ  வைரலாகி வருகிறது. திமுகவுக்கு கெட்ட பெயர் உண்டாக்க அதிமுக ஐடி விங்க்  இந்த வீடியோக்களை வேகமாக பரப்பிய நிலையில் இன்று மதியத்திற்கு உள்ளாகவே திமுக அதற்கு தக்க பதிலடியை கொடுத்திருக்கிறது.

அதிமுகவை சேர்ந்த ஐடி விங்க் பிரமுகர் ஒருவர் அந்த மூதாட்டியை அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றி டிக்கெட் எடுக்குமாறு சொல்லிக் கொடுத்து இந்த வீடியோவை எடுத்திருப்பதை திமுகவினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதையடுத்து கோவை அதிமுக ஐ.டி விங்கை  சார்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் ஏற்றி நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்சினை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார். இது அதிமுகவின் தோல்வி என்று சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in