கனடா பிரதமர் மிகப் பெரிய தவறு செய்து விட்டார்... இந்தியாவுடன் மோதுவது யானையுடன் எறும்பு மோதுவதைப் போன்றது!

இந்தியா கனடா
இந்தியா கனடா

இந்தியா மீதான குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பது கனடாவிற்கு நல்லது என்றும் இருவருக்கும் இடையே நடப்பது யானைக்கு எறும்புக்கும் இடையிலான பிரச்சினையைப் போன்றது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்காவின் முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின், ‘’ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவை விட கனடாவுக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும். இந்தியாவுடன் கனடா சண்டையிடுவது ’’யானைக்கு எதிரான சண்டையை எறும்பு துவங்குவது போன்றது" என்றார்.

பிரதமர் ட்ரூடோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் பின்வாங்க முடியாத வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தியா மீதான அவரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. கனடா அரசாங்கம் ஏன் ஒரு பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது என்பதை அவர் விளக்க வேண்டும்" என்று முன்னாள் பென்டகன் அதிகாரி கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in