`இது மிகவும் தவறு; அண்ணாமலைக்காகச் சொல்லவில்லை'- அடக்கிவாசிக்கும் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!`இது மிகவும் தவறு; அண்ணாமலைக்காகச் சொல்லவில்லை'- அடக்கிவாசிக்கும் ஜெயக்குமார்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘’நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் தொடர்பாகச் சிபிஐ விசாரிக்க வேண்டுமென மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் மனு அளித்து உள்ளோம். உரிய நேரத்தில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவரும் உறுதியளித்துள்ளார்.

10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஊழல் புரிந்துள்ளனர். எப்படியெல்லாம் ஊழல் செய்துள்ளார்கள் என்பதெல்லாம் தொகுத்துப் பட்டியலை அமித் ஷாவிடம் அளித்துள்ளோம். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையைத் திமுகவைச் சார்ந்தவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்தியா என்பது எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஒரு மொழிக்கு மட்டும் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக் கட்டாயம் பாடியிருக்க வேண்டும். இது மிகவும் தவறானது. அண்ணாமலைக்காகச் சொல்லவில்லை.

எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கிறது என்றால் அதை முழுமையாகப் பாடியப் பிறகு அதன்பிறகு அவர்கள் மொழிப்பாடலைப் பாடலாம். ஆனால் பாடும் போது பாதியில் நிறுத்துவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அரசியலில் நாகரிகம் வேண்டும். பண்பாடு வேண்டும். யாராவது எங்கள் மீது கல் வீசினால்தான் எதிர்வினை ஆற்றுகிறோம். யார் விமர்சனம் வைக்கிறார்களோ. அவர்கள் மீதுதான் நாங்கள் விமர்சனங்கள் வைப்போம். ஆனால் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் எங்களை ஒருமையில் பேசியுள்ளார். அவருக்கு நட்டுக் கழண்டுள்ளது. அதனால் அப்படிப் பேசி இருக்கிறார். அதனையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை. அதிமுக குறித்து விமர்சனம் செய்யும் பாஜக நிர்வாகிகளை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டிக்க வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாங்களும் எதிர்வினை ஆற்றுவோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in