பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை இந்தியா கூட்டணியினர் களவாடப் பார்க்கின்றனர்... அமித் ஷா குற்றச்சாட்டு

அமித் ஷா
அமித் ஷா

’இந்தியா கூட்டணி கட்சியினர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை திருடி, இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப் பார்க்கின்றனர்’ என பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசினார்.

“காங்கிரஸ் தலைவர்களும், இந்தியா கூட்டணியின் லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி போன்றவர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைத் திருடப் பார்க்கிறார்கள். அப்படி கர்நாடகாவில், அவர்கள் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினர். ஹைதராபாத்தில் மீண்டும் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார்கள். இதேப் போக்கில் மம்தா பானர்ஜி 180 சாதிகளை விட்டுவிட்டார்” என்று அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா கூட்டணி தலைவர்கள்
இந்தியா கூட்டணி தலைவர்கள்

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பீகார் மாநிலம் ஆரா மக்களவைத் தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் இந்தியா கூட்டணி கட்சியினரை கடுமையாக தாக்கினார். ஓபிசி மக்களுக்கான இடஒதுக்கீட்டைத் திருடி இஸ்லாமிய மக்களுக்கு வழங்குவதாக எதிர்க்கட்சியினரை தாக்கினார். இவ்வாறு இடஒதுக்கீடு களவு போவதை தவிர்க்க, பாஜகவுக்கு வாக்களிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

“பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை, தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை யாரும் தொட விடமாட்டோம். பாஜக வெற்றி 400ஐத் தாண்டுவதற்கு நீங்கள் உதவி செய்தால், முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குவோம்” என்றார். பீகாரில் ஆட்சி நடத்திய லாலு பிரசாத் யாதவையும் அவரது அரசியல் வாரிசுகளையும் மறக்காது தாக்கினார்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

“பீகாரில் காட்டாட்சி மற்றும் கடத்தல் தொழில்கள் மீண்டும் வருவதை மக்கள் விரும்பவில்லை. தன் மனைவியை பீகாரின் முதல்வராக்கிய லாலு, மகன்கள் மற்றும் மகள்களுக்கு மட்டுமே கட்சியிலும் ஆட்சியிலும் பதவி அளித்து வருகிறார்” என்று அமித் ஷா குற்றம் சாட்டினார். மேலும் ஆரா தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சிபிஐ-எம்எல் கட்சியையும் அடுத்ததாக கவனித்தார். "தவறியும் சிபிஐ-எம்எல் வென்றால் நக்சலிசம் மீண்டும் இங்கு தழைக்கத் தொடங்கும்" என்று தொகுதி மக்களை அவர் எச்சரித்தார்.

அமித் ஷாவின் கருத்துக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், “அமித் ஷா பீகாரில் வெறுப்புப் போக்கை விதைக்கப் பார்க்கிறார். அவரது பொய் வலையில் பீகார் மக்கள் விழ மாட்டார்கள். பாஜகவின் பொய், வெறுப்பு போக்கை பீகார் கடைபிடிக்காது. சரி, கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் பீகாருக்கு என்ன செய்தார்களாம்?” என்று மடக்கினார்.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!

ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in