குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து பாசிசத்தை காட்டுகிறது என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே சமுத்திரம் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது எனக் கூறுவதற்கு மாநில அரசுக்கு உரிமை கிடையாது என அமித்ஷா கூறியுள்ளார். மாநில உரிமையைப் பறிப்பதற்கு அவர்கள் எந்த அளவுக்கு பாசிசத்துடன் நடந்து கொள்கின்றனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தமிழக முதல்வர் முதலமைச்சர் என்பதைத் தாண்டி ஜனநாயக பாதுகாவலராக உள்ளார்”என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ”மாமன் - மச்சான் உறவுடன் அனைத்து சமூகத்தினரும் பழகி வருகின்றனர். எனவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு கூறும் நிலையில், ஜனநாயகத்தை காக்கக்கூடிய நிலையில் உள்ள தமிழக முதல்வர் அச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறியுள்ளார். தேர்தல் ஆணையர் நியமனம், தேர்தல் பத்திர முறைகேடுகளுக்கு மக்கள் இரண்டு மாதங்களில் தக்க பதிலடி கொடுப்பார்” என்று அவர் கூறினார்
இதையும் வாசிக்கலாமே...
அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள்.. இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!
செல்லூர் ராஜூ செம தாக்கு... தமிழ்நாட்டுல இருக்கிற ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்!
குட் நியூஸ்... அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000!
இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வேண்டும்... தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம்!
பெண்ணைக் கேலி செய்த வாலிபர் கோடாரியால் வெட்டிக் கொலை.. தாபாவில் பயங்கரம்!